இந்தியாவில் நல்லாட்சி நடத்துவதில் தமிழகம் 2-வது இடம்! – பொது விவகார மையம்!

0
928
tamilnadu 2nd place good governance India - public affairs center

பெங்களூருவை சேர்ந்த பொது விவகார மையம் ( Public Affairs Centre) என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கடந்த 3 ஆண்டு கால ஆட்சி குறித்த ஆய்வை மேற்கொண்டது.tamilnadu 2nd place good governance India – public affairs center

சமூக, பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் குறித்து பொது விவகார மையம் வெளியிட்டுள்ள ஆய்வின் பட்டியலில் பரப்பளவில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தெலங்கானா மூன்றாவது இடமும், கர்நாடகா நான்காம் இடமும், குஜராத் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சமூக, பொருளாதார சமத்துவம் இந்த மாநிலங்களில் மிக அதிகமாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்கள் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளிலும் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் சிறிய மாநிலங்களின் பட்டியலில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :