இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
565
Today Horoscope 21-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 5ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி,
21.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி மாலை 6:35 வரை;
அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:19 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

.

மேஷம்:

உங்களின் நற்செயல்களை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் ஓரளவே லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெண்கள் ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது.

 

ரிஷபம்:

புதிய உற்சாகத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்தி லாபம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

மிதுனம்:

மனக்குழப்பம் நீங்க குடும்பத்தினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் உடல்நலனில் அக்கறை கொண்டால் மருத்துவச் செலவை தவிர்க்கலாம்.

கடகம்:

உங்களின் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்:

பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

பூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

துலாம்:

பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்:

நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்..

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்