மன்னாரில் அபிவிருத்தி பணிகளுக்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது தெரியுமா….?

0
278
Champika said no truth waste worn Singapore brought Sri Lanka

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திப் பணிகளுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியே செலவிடப்பட்டு வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். minister patali champika ranawaka speak mannar district development

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவினால் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் இதற்காக ஒதுக்கியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கிணங்க வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் ஒதுக்கியமைக்கும் அமைச்சருக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் நகரில் நவீன சந்தைத் தொகுதியுடன் கூடிய புதிய பஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மன்னாரில் நடைபெற்ற போது அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அமைச்சர் சம்பிக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
minister patali champika ranawaka speak mannar district development

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites