பழைய முறையிலா புதிய முறையிலா தேர்தல் – சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கலந்துரையாடல்

0
353
Lankan election method old method new method discuss minority party

தேர்தல் முறைமை தொடர்பில் ஏகோபித்த முடிவொன்றை வைக்க சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan election method old method new method discuss minority party

மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? இல்லை பழைய முறைமையில் நடத்துவதா? என்பது குறித்து சிறுபான்மை மற்றும் சிறிய தேசிய கட்சிகளுக்கும், பெரும்பான்மை கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி விடயம் குறித்த கட்சித்தலைவர் கூட்டத்திற்கு முன்னதாக சிறுபான்மை மற்றும் சிறிய தேசிய கட்சிகள் தேர்தல் முறைமை குறித்து ஏகோபித்த முடிவொன்றை எட்டும் முகமான விசேட கலந்துரையாடலைச் செய்யவுள்ளன.

குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் இந்த விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளர்.

இக்கலந்துரையாடலின் போது பெரும்பாலும் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்தக் கோருவதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை எழுத்து மூலமாக எதிர்வரும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஏகோபித்து வெளிப்படுத்துவதற்கு முனைப்புக் காட்டவுள்ளதாக சிறுபான்மை தேசிய கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர் பைசர் முஸ்தபா புதிய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாகவும் சுதந்திரக்கட்சியும் அதனையே விரும்புவதாகவும்  குறிப்பிட்டிருந்தார்.

எனினும் புதிய முறைமையில் நடத்தவதற்காக செய்யப்பட்ட எல்லை நிர்ணய செயற்பாட்டில் குழப்ப நிலைமைகள் காணப்படுவதால் அவற்றை திருத்தம் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுமாகையால் பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சிறுபான்மை மற்றும் சிறிய தேசிய கட்சிகள் கோரியதால் அது தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lankan election method old method new method discuss minority party

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites