சிறைக்குள்ளிருந்தவாறே போதை பொருள் வர்த்தகம் – கடத்தல்காரர்களின் புதிய அனுகுமுறை

0
446
drugs controller try learn use jail prisoners security office business wlikada

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்தவாறே போதை பொருள் வர்த்தகத்தினை மேற்கொள்ள புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. drugs controller try learn use jail prisoners security office business wlikada

போதை பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் வாயிலாக தண்டனை அனுபவித்து வருபவர்களால் இந்த புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறைச்சாலை காவலாளர்களை போதை பொருள் பாவனைக்கு அடிமையாக்குவதன் மூலர் அவர்கள் வாயிலாக சிறைச்சாலையில் இருந்தவாறே போதை பொருள் வர்த்தகத்தினை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த திட்டமிடல்களுக்கு அமைவாக செயற்பட்ட 10 சிறைச்சாலைகளின் காவலாளர்கள் சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய அளவில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட 8 பேர் தங்களது தண்டனைகளை இரத்து செய்யுமாறு மேன் முறையீடு செய்துள்ளதுடன், அவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
drugs controller try learn use jail prisoners security office business wlikada

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites