பாரத லக்‌ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்….!

0
530
dhumintha silva death penalty case baratha luxman side first gun fire

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரி, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்காவிட்டால், எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்திருக்காது என்பதோடு அந்த துப்பாக்கிப் பிரயோகமே அனைத்திற்கும் காரணம் என ஜனாதிபதி சட்டதரணி அணில் டி சில்வா உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். dhumintha silva death penalty case baratha luxman side first gun fire

பாரத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரியான காமினி என்பவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது, முதலாவதாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை அடுத்தே அனைத்து சம்பவங்களும் ஆரம்பமானதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே துமிந்த சில்வா குறித்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதை சட்டமா அதிபர் திணைக்களம் கூட ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தம்மை குற்றமற்றவராக்கி விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பதில் வழங்கியதுடன், அந்த திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விடயங்களை அவர் நீதியரசர்கள் குழாமிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை என்பதோடு குறித்த தினத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.

துமிந்த சில்வாவின் தலைப் பகுதியில் முதலாவதாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் காயமடைந்ததாகவும் அவர் அந்த இடத்திலிருந்து உடனே வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்

பாரத லக்ஸ்மனின் பாதுகாப்பு அதிகாரி காமினி என்பவர் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்ததன் காரணமாகவே அனைத்து சம்பவங்களும் இடம்பெற்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் துமிந்த சில்வா முதலில் காயமடைந்து சுயநினைவை இழந்ததால், அதன் பின்னர் இடம்பெற்ற எந்த ஒரு சம்பவத்திற்கும் துமிந்தசில்வா பொறுப்பாளி அல்லவென்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலைமையில் துமிந்த சில்வாவிற்கு எதிராக கொலைக்குற்றம் சுமத்தி எவ்வாறு குற்றவாளியாக்க முடியும் என்று உயர்நீதிமன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட சாட்சிகள் புறக்கணிக்கப்பட்டு, பாரத லக்ஸ்மனின் நெருங்கிய நபர் ஒருவரின் சாட்சி ஒன்றை மாத்திரம் மையப்படுத்தி, துமிந்த சில்வாவை குற்றவாளியாக ஆக்கியுள்ளதாகவும், ஜனாதிபதி சட்டத்தரணி அணில் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது சாட்சி நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கை உள்ளிட்ட எந்த நிபுணத்துவ சாட்சியுடனும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை மேல் நீதிமன்றில் சுட்டிக்காட்டியபோதும், நீதிபதிகள் அவற்றை கருத்திற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை முன்னிறுத்தி, துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க முடியாமை காரணமாக அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கு போலி சாட்சியங்களை உருவாக்கி விசாரணையாளர்கள் மேல்நீதிமன்ற வழக்கை வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சாட்சி, நூறு சதவீதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என வழக்குத் தீர்ப்பிலே இருக்கும்போது நீதியான வழக்கு விசாரணை ஒன்றை வழங்காது துமிந்த சில்வா குற்றவாளியாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தமது கருத்திற்கமைய செயற்படாத நபர்கள் பிரதிவாதியாக பெயரிடப்படுவார்கள் என விசாரணையாளர்கள் அச்சுறுத்தி துமிந்த சில்வாவிற்கு எதிராக போலியான சாட்சிகளை நிர்மானித்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா மேல்நீதிமன்ற வழக்கு விசாரணையை உதாரணம் காட்டியுள்ளார்.

விசாரணையாளர்கள் உருவாக்கிய அவ்வாறான போலி சாட்சிகளின் முரண்பாடுகள் பலவற்றை சுட்டிக்காட்டிய போதும், அவை தீர்ப்பு வழங்கப்படும் போது அவதானத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் ஒரு நீதிபதி துமிந்த சில்வாவை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெளிவுப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், மற்றைய நீதிபதி ஒருவர் தமது தனிப்பட்ட தீர்ப்பை முன்வைக்காததன் காரணமாக, துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கிய மேல் நீதிமன்றின் தீர்ப்பு, மெய்யாகவே நீதியான தீர்ப்பு இல்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் டி சில்வா உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
dhumintha silva death penalty case baratha luxman side first gun fire

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites