அவுஸ்திரேலியா நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை கடுமையாக்குவதற்கு சாத்தியகூறுகள்

0
289
Australian citizenship minister Alan Tudge criticize very difficult visa future

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை அந்நாட்டு அரசாங்கம் மேலும் கடுமையாக்குவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Australian citizenship minister Alan Tudge criticize very difficult visa future

குடியுரிமை தொடர்பான அமைச்சர் எலன் டுட்ஜ் (Alan Tudge) மறைமுகமாக இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னரேயே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிகமாக ஆலோசிக்க வேண்டியுள்ளதுடன் ஒருவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க முன்னர் அவர் அவுஸ்திரேலிய விழுமியங்களை அறிந்துகொள்ளும் வகையில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி அவுஸ்திரேலியாவில் சில வருடங்கள் வாழ்ந்தபின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒருபகுதி விசாக்கள் அமைந்துள்ளன.

ஆனால் ஏனைய விசாக்கள் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னரே நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகளாக Skilled Migration விசா மூன்றில் இரண்டு பாகமாகவும்இ பெற்றோர் மனைவி பிள்ளைகளுக்கான குடும்ப விசாக்கள் மூன்றில் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னரேயே நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் விசா நடைமுறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதவேளை வருடமொன்றுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படும் நிலையில்இ கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australian citizenship minister Alan Tudge criticize very difficult visa future

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites