கனடாவின் ஒரு வார்த்தைக்காக ஏங்கி நிற்கும் அகதி!

0
309
refugee craves Canada word

கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே 133 நாட்களாக வாழ்ந்து வரும் சிரியாவை சேர்ந்த அகதி ஒருவர், கனடாவின் உதவிக்காக காத்திருக்கிறார். refugee craves Canada word

பல நாடுகள் சுற்றிய Hassan Al Kontar கடைசியாக மலேசியாவை வந்தடைந்தார்.

அங்கும் அவரது தற்காலிக விசா காலாவதியானதால், நாட்டை விட்டு வெளியேற இயலாமல் விமான நிலையத்திலேயே அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

Hassan Al Kontar அவ்வப்போது டுவிட்டரில் தனது நிலை குறித்து பதிவு செய்து வருவதால் உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்கு உதவிகள் வரத்தொடங்கியுள்ளன.

அவருக்கு குளிக்கும், துணி துவைக்கும் இடங்களுக்கும் போக அனுமதி இல்லாததால் அழுக்கு உடைகளை அணிந்திருப்பதாகவும், அது அவருக்கே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார்.

கனடாவில் வசிக்கும் Hassanஇன் உறவினர்கள் சிலர் மூலம் பண நன்கொடைகள் அவர் பெற்றுள்ளார். அவர்கள் Hassan ஐ கனடாவுக்கு அகதியாக கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால் அதற்கான செயல்முறை முடிய இரு ஆண்டுகள் வரை ஆகும். இதனால் Hassanஇன் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்கக் கோரும் 300,000 பேர் கையெழுத்திட்ட கடிதமொன்று கனடா அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கனடாவின் பதிலுக்காகக் காத்திருக்கும் Hassan “எப்படியாவது இந்த விமான நிலையத்தை விட்டு வெளியே சென்று ஒரு சாதாரண மனிதனைப் போல வாழ ஏங்குகிறேன்” என தெரிவித்தார்.

tags :- refugee craves Canada word

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்