மீண்டும் சர்ச்சையை கிளப்புவாரா மாயா?

0
767

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பாடகியான மாதங்கி அருள்பிரகாசம் (MIA) தொடர்பில் வெளியாகியுள்ள ஆவணப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. Maya MIA Documentary

தற்போது சிறப்பு காட்சிகள் சில திரையிடப்பட்டுள்ள இவ் ஆவணத்திரைப்படம், இலங்கையின் யுத்தம் தொடர்பிலும் அலசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆவணப்படம் செப்டம்பர் 28 ஆம் திகதி திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

மாதங்கியின் வாழ்க்கை, அவரது குடும்பப் பின்னணி , இசைக்கு அப்பால் அவரது தனிப்பட்ட வாழ்வு உட்பட பல விபரங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பிலும், இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இலங்கை யுத்தம் தொடர்பில் தனது இசையின் மூலம் உலகிற்கு எடுத்துக்கூறியவர் மாயா.

அவர் தொடர்பான இந்த ஆவணப்படமும் சர்ச்சைகளை உருவாக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.