தப்பியது காலி மைதானம்! : பணிந்தது அரசு

0
1263
Galle Cricket Ground Removal

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்படாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். Galle Cricket Ground Removal

மேலும் சர்ச்சைக்குரிய கட்டிடம் மட்டுமே அகற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி பின்னதுவ பிரதேசத்தில் அதற்கான புதிய மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் இம்முடிவுக்கு இலங்கை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

மேலும், காலி சர்வதேச மைதானத்தை சுற்றி நேற்றிரவு முதல் விசேட பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலி விளையாட்டு திடலின் கட்டிடம் அகற்றும் போது அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்ற நோக்கிலேயே மேற்படி விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அம்மைதானம் அகற்றப்படாது என அரசாங்கள் பாராளுமன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய பங்கு காலி கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு.

இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானம் இதுவாகும். இதுமட்டுமன்றி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென பெயர் பெற்றது இந்த மைதானம்.

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு டெஸ்ட் தொடரினதும், முதல் போட்டி இங்கேயே நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.