சேமியா முட்டை பிரியாணி செய்ய…!

0
1034

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
பட்டை – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
முட்டை – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:
சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும். நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி  தூவி இறக்கவும். இப்பொழுது  சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.