சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்

0
620
village youth preparing hangman post

போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு தாங்கள் தன்னார்வமாக செய்வதற்கு மஹாவிலச்சிய கிராமத்தில் உள்ள ஐந்து இளைஞர்கள் முன்வந்துள்ளனர். (village youth preparing hangman post)

அனுராதபுர மாவட்டத்தில் பின்தங்கிய கிராமமான மஹாவிலச்சிய கிராமத்திலும் பலர் பலவகையான போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 30 மற்றும் 40 வயதுடைய விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இந்த இளைஞர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உள்ள மக்களை சிரமத்துக்குள்ளாக்கி தினமும் அதிகரித்துவரும் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மஹாவிலச்சிய மற்றும் நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் தாங்கள் இந்த பதவியை தன்னார்வமாக செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தினமும் காணப்படும், அறியப்படும் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்ததொரு நல்ல முடிவே மரண தண்டனை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் குற்றங்கள் செய்யும் மற்றவர்கள் பயப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாங்கள் விவசாயிகள் மிகப்பெரிய கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் போதைப் பொருள் விநியோகத்தர்கள் அப்படி அல்ல.

அதனால் நாங்கள் பயிற்சிக்கு பின்னர் இந்தச் அலுகோசு பதவியை ஏற்கத் தயாராக உள்ளோம் என்றும் குறித்த கிராமத்தின் இளைஞர்கள் ஐவர் முன்வந்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; village youth preparing hangman post