இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
727
இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 5ம் தேதி,
19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 1:58 வரை;
அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

.

மேஷம்:

திட்டமிட்டு செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

 

ரிஷபம்:

வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வந்து சேரும். பணியாளர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

மிதுனம்:

நற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் காண்பீர்கள். சுபநிகழ்வு நடத்தும் சூழல் குடும்பத்தில் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை குறையும்.

கடகம்:

சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். புதிய இனங்களில், திடீர் செலவு அதிகரிக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும்.

சிம்மம்:

முக்கிய பணி ஒன்றை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும்.கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கன்னி:

பூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

துலாம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்:

நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்..

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்