இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு

0
764
increase mortality rate Sri Lanka

2017 ஆம் ஆண்டில் பிறப்புக்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விட 5,021 குறைந்துள்ளதாகவும் 2017 ஆம் ஆண்டின் இறப்புக்களின் ஏண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விட 9,057 அதிகரித்துள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விட 4625 குறைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. (increase mortality rate Sri Lanka)

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட அண்மைய தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

மேலும் அந்த அறிக்கையில் 2017 ஆம் ஆண்டு 326,052 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இதில் 165,926 ஆண் குழந்தைகள் எனவும், 160,126 பெண் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டு 100 பெண்கள் பிறந்த போது 103.6 ஆண்கள் பிறந்துள்ளனர். 2016 ஆம் வருடதில் இந்த எண்ணிக்கை 104.5 ஆக இருந்துள்ளது.

சனத்தொகையில் ஆயிரத்தில் ஏற்படும் பிறப்பு விகிதம் 2016 ஆம் ஆண்டு 15.6 ஆக இருந்துள்ளதுடன் 2017 ஆம் ஆண்டு 15.2 ஆக குறைந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 169,365 ஆகும். இதில் 147,238 திருமணங்கள் சாதாரண சட்டத்தின் கீழும், உடரட சட்டத்தின் கீழ் 386 திருமணங்களும், முஸ்லிம் சட்டத்தின் கீழ் 21,741 திருமணங்களும் நடைபெற்றுள்ளன.

2016 ஆம் ஆண்டு 152,033 திருமணங்கள் சாதாரண சட்டத்தின் கீழும், உடரட சட்டத்தின் கீழ் 491 திருமணங்களும், முஸ்லிம் சட்டத்தின் கீழ் 21,466 திருமணங்களும் நடைபெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ள மரணங்கள் 139,822 ஆக இருந்துள்ளதுடன் இதில் 77,206 ஆண்களும், 62,616 பெண்களும் ஆவர். சனத்தொகையில் ஆயிரத்தில் ஏற்படும் மரணத்தின் சதவிகிதம் 2016 இல் 6.2 ஆக இருந்துள்ளதுடன் 2017 ல் 6.5 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; increase mortality rate Sri Lanka