அமெரிக்கா – இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி!

0
555

இலங்கை கடற்படையினருடன் இணைந்து அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். America Sri Lanka Navy Trinco Joint Military Practice

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை என்ற பெயரில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படையினருடன், சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும், சிறப்பு படகு படையணி ஆகியவற்றைச் சேர்ந்த படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படையணி பயிற்சி பாடசாலையில் இந்த கூட்டுப் பயிற்சி ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites