விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

0
428
viharai image idol engraved Clothing

வவுனியாவில் விகாரையின் உருவத்தை ஆடையில் பொறித்திருந்த பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (viharai image idol engraved Clothing)

வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண்ணே பொலிஸாரால் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இவர் கடந்த வாரமளவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், விகாரை பதிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன், குறித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாயை பார்வையிடுவதற்காக இந்த ஆடையை அணிந்து சென்ற போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அணிந்திருந்த ஆடையில் விகாரையின் தோற்றம் கொண்ட உருவம் பதிக்கப்பட்டிருந்ததனால் வைத்தியசாலை பொலிஸார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு சென்ற அவசர பொலிஸார், இந்தப் பெண்ணை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பெண் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; viharai image idol engraved Clothing