எதிர்காலத்தில் நாடாளுமன்றம் விற்கப்படும், அதற்கு காரணம் ரணில் விக்கிரமசிங்கதான் – நாமல் குற்றச்சாட்டு

0
458
tamil news ranil wickramasinghe government sale sri lanka parliament

(tamil news ranil wickramasinghe government sale sri lanka parliament)

எதிர்காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத்தை விற்பனை செய்து விடும் சாத்தியம் உள்ளது. அதற்கு காரண கர்த்தாவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார் என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

இன்று ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தையும் விற்பனை செய்ய முடியுமாக இருந்தால் அதனையும் செய்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூர்ய ஏற்கனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தை விற்பனை செய்துவிட்டார். நாடாளுமன்ற ஜனாநாயகம் என்பது இன்று இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.

இன்று ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஜே வி பி மற்றும் தமிழ் கூட்டமைப்பு என அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே உள்ளன. அதனால் நாடாளுமன்ற ஜனாநாயகம் என்ற ஒரு விடயம் இன்று இல்லை.

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்து வரும் இந்த அரசாங்கம் நாடாளுமன்ற காணிக்கு பத்திரம் ஒன்றை தயாரித்த பின்னர் அதனையும் விற்பனை செய்துவிடுவார்கள்.

இன்னும் இரண்டு வருடங்கள் இந்த அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல அனுமதித்தால் நாடாளுமன்றத்தினால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என கூறி அதில் ஹோட்டல் ஒன்றையோ அல்லது சொகுசு மாளிகை ஒன்றையோ அமைப்பதற்காகவோ விற்று விடுவார்கள்.

அல்லது தனியார் நிறுவனத்திற்கு வைத்தியசாலை அமைப்பதற்கேனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கினால் எவரும் ஆச்சர்யப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

(tamil news ranil wickramasinghe government sale sri lanka parliament)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites