ஞானசாரவுக்கு எதிரான இறுதி தீர்ப்பு 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் : நீதிமன்றம்

0
532
Gnanasara Thero defamation case August 8

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மாதம் 8ம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.(Gnanasara Thero defamation case August 8 )

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதன்படி அந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்வரும் மாதம் 08ம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags:Gnanasara Thero defamation case August 8 ,Gnanasara Thero defamation case August 8 ,Gnanasara Thero defamation case August 8 ,