ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்

0
379
05 Year old girl sexual abuse 48 year old man

ஐந்து வயது முன்பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 48 வயதுடைய திருமணமான நபர் ஒருவரை ஹல்மில்லவௌ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக எப்பாவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (05 Year old girl sexual abuse 48 year old man)

இந்தச் சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சந்தேக நபர், குறித்த சிறுமி தனது இல்லத்தின் முற்றத்தில் தனியே விளையாடிக் கொண்டிருந்த போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியின் தந்தை பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 05 Year old girl sexual abuse 48 year old man