பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி

0
534
former minister basil rajapaksha criticize present government

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிரான இரண்டு வழக்குகளில் அவர் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (Former Minister Basil Rajapaksa allowed travel abroad)

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பசில் ராஜபக்சவிற்கு எதிராக இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இரண்டு வழக்குகளும் இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மற்றும் கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலத்தில் சிகிச்சைக்காக அமெரிக்க செல்வதற்கு அனுமதி வழங்குமாறு பசில் ராஜபக்ச சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி குறித்த காலப்பகுதியில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மற்றும் கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா திவிநெகும திட்டத்தின் நிதி செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்கள் அடங்கிய கையேடுகள் அச்சிடுவதற்காக அந்த திட்டத்தின் 02 கோடி 94 இலட்சம் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Former Minister Basil Rajapaksa allowed travel abroad