அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை; பெண் கைது

0
476
Development officer killed girl arrested

அங்குருவாதொட்ட வேரவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கிராம சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Development officer killed girl arrested)

அங்குருவாதொட்ட, யாலசந்தி, வேரவத்தை பிரதேசத்தில் விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தொடங்கொட பிரதேச செயலக அலுவலகத்தில் பணியாற்றும் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

தகாத உறவு முறை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Development officer killed girl arrested