வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி!

0
1677
Welikada Prison Search Phones Found

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது , கைப்பேசி வியாபாரமொன்று நடத்தப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. Welikada Prison Search Phones Found

போதைப்பொருள் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் மாத்திரம் 30 கைப்பேசிகள், பற்றரிகள் 100 மற்றும் சார்ஜர்கள் 20 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி இரவு இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிறைச்சாலையின் 30 புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பங்குபற்றியுள்ளனர்.

குறித்த பெண்கள் பிரிவில் இருந்த 121 சிறைக்கைதிகள் , நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனருத்தாபன அமைச்சர் தலதா அதுகோரலவின் பணிப்புரைப்புக்கு அமைய உடனடியாக அகுனகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டதையடுத்தே இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதும் அங்கு 300 சந்தேகநபர்கள் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், பற்றரியை சார்ஜ் செய்யும் தினத்தை கணித்து அதன் அடிப்படையிலேயே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.