சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்கவுக்கு ஐ.சி.சி. விதித்துள்ள அதிரடித் தடை

0
650
Chandimal Ban details

 

இலங்கை அணி வீரர் தினேஷ் சந்திமால், பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 4 ஒரு நாள் போட்டிகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் கலந்து கொள்ள ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. Chandimal Ban details

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணி வீரர்கள் 2 மணித்தியாலங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, இம்மூவரும் ஏற்றுக்கொண்டதற்கு இணங்க இந்த போட்டித் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.