அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை

0
822
tamil news dhambara amila thero request dont wear muslim abaya

(tamil news dhambara amila thero request dont wear muslim abaya)

முஸ்லிம் சமய விவகார அமைச்சும் (ஏ.எப்.சி) தேசிய நல்லிணக்க ஆணையகமும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளி வாசல்களின் நம்பிக்கையாளா் சபைக் குழுவை அழைத்து சிறந்த 20 பள்ளிவாசல்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நேற்று (14) அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகா் கருஜயசூரிய கலந்து கொண்டார்.

அத்துடன் அமைச்சா்களான ஏ. ஹலீம், றிசாத் பதியுத்தீன், மனோ கனேசன், ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சா் அலி சாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்காரும் மற்றும் அரபு நாடுகளின் துாதுவராலய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

tamil news dhambara amila thero request dont wear muslim abaya

இதன்போது, ஸ்ரீ ஜெயவா்த்தன பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளா் தம்பர அமிலத் தேரோ அங்கு கருத்து வெளியிடுகையில், பள்ளிவாசல்கள் மத விடயங்கள் மட்டுமல்லாது இனங்களையும் நல்லிணக்கப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.

பௌத்தா்கள், ஹிந்துகள், கிறிஸ்த்தவா்கள் ஆண், பெண் என்ற வா்க்க வித்தியாசம் இல்லாமல் சகலரும் பள்ளிவாசல்களுக்கு சென்று அங்குள்ள மத கலை கலாச்சார மற்றும் சமுக பொருளாதார விடயங்களில் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் சகல இனங்களும் ஒன்றினைந்து முன்சென்றால் இந்த நாட்டினை எவரும் பிரிக்கவோ, குழுப்பவோ முடியாது.

இந்த உலகில் ஒரு சிறந்த நாடாக இலங்கை விளங்குகின்றது.

இலங்கை போன்ற நாட்டை உலகில் காணமுடியாது

இலங்கை போன்ற ஒரு நாடு உலகில் எங்கும் காணமுடியாது 4 இனங்கள் 3 மொழிகள் பேசும் ஒரு நாடு இந்த மேடையில் உள்ள பூக் கொத்தினைப் பாருங்கள் இந்தப் பூவில் பல வா்ணப் பூக்கள் இணைந்து இருக்கும்போது மிகவும் அழகாக உள்ளது.

இது போன்று தான் எமது நாடும், நமது நாட்டில் வாழும் சகல இனங்களும் அழகாக இருக்கின்றன.

இந்த நாட்டில் 70 வீத பௌத்தா்கள் 14 வீத தமிழா்கள் 10 வீத முஸ்லீம்கள் 4 வீத கிறிஸ்த்தவா்கள் மற்றும் சில இனத்தவர்களும் சக வாழ்வுடன் வசிக்கின்றனர்.

இலங்கையில் வாழும் சகல சமுகங்களும் ஒன்றிணைந்தால் நாட்டில் எவரும் போதைவஸ்த்து கொண்டுவருதல், வெளிநாட்டவா் எமது பிரச்சினைக்குள் உள்நுழைதல் போன்ற எந்தப் பிரச்சினையும் நாம் தடுக்க முடியும்

நாம் சிங்களவா் தமிழா் முஸ்லீம் என்ற பாகுபாடு. மலையகம் மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம் என்ற பாகுபாடுகள் நமக்குள் வேண்டாம்.

இந்த பள்ளிவாசல்கள் செய்யும் முறைகளை இங்கு திரையில் அவதானித்தோம்.

இது போன்று ஏனைய பௌத்த மத ஸ்தானங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும்.

பள்ளிவாசல்கள் தொழுகையை மட்டும் நடத்தாமல் இரத்ததானம், வீடு கட்டிக் கொடுத்தல் ஏழைகளுக்கு சுயதொழில், தாய் தந்தையா் இல்லாத அனாதைகளுக்கு கல்விக்கு உதவுதல் நோன்பு திறப்பதற்கு ஏனைய சமுகங்களை இணைத்து கொள்ளுதல் போன்ற நற்சமுக வாழ்வாதார விடயங்களில் ஏனைய சமுக, மத ஸ்தாபனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன.

எனது பல்கலைக்கழகத்தில் கூடுதலான முஸ்லீம் மாணவிகள் பட்டப்படிப்பினை பயிலுகின்றனா்.

அவா்கள் முகத்தினை மூடுவதை தவிர்த்துக் கொண்டால் நல்லது.

இதனால் ஏனைய இன மாணவா்கள் அண்டி பழக முடியாமல் முஸ்லீம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.

இதனால் ஏனைய சமுகங்களோடு பழகி அவா்களது நல்லிணக்கம் கலை கலாச்சார விடயங்களில் இந்த மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனா் எனவும் அமில தேரோ குறிப்பிட்டார்.

(tamil news dhambara amila thero request dont wear muslim abaya)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites