“இன பிரச்சினையை தீர்ப்பதற்கு காத்திரமான முயற்சிகள் எதுவும் இல்லை” தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன் குற்றச்சாட்டு!

0
417

தாய்லாந்து பிரதமர் நேற்று காலை கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Thailand Prime Minister Meets TNA Leader Sambanthan

நாட்டில் தேசிய இனப்பிரச்சனையானது 70வது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தீர்க்கப்படாமலே உள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இதன் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய இன பிரச்சினையை தீர்ப்பதற்கு காத்திரமான முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும்; இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வை தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த இரா.சம்பந்தன் அத்தகைய அதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதாக எடுத்துரைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர்,
வடக்கு மற்றும் கிழக்கில் தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர் நிச்சயமாக தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும்; கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites