ஆளுநர்கள் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது – நாராயணசாமி

0
348
accused central government taking staterights through governors

accused central government taking staterights through governors

ஆளுநர்கள் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயனசாமி, பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசி வரும் நிலையில் தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், கல்வி மீதான மாநிலங்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும்விதமாக நீட் தேர்வு, யூ.ஜி.சி. அமைப்புக்கு மாற்றாக தேசிய உயர்கல்வி ஆணையம் ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பாஜகவினர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பற்றி விமர்சிப்பது குறித்து பதிலளித்த அவர், மதம் சார்ந்த பாஜக, மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.

ஆளுநர் அதிகாரித்தைப் பொருத்தவரையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு உண்மை நிலை தெரியவந்துள்ளது. ஆளுநரின் தலையிட்டால் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து தாமதமாவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு குறித்து பேசிய நாராயணசாமி, கூடுதல் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

accused central government taking staterights through governors

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :