தேர்தல் பிரசாரத்தில் பாரிய குண்டு வெடிப்பு – 111 பேர் உயிரிழப்பு

0
554
pakistan mastang district 100 killed 150 injured mastang blasts

(pakistan mastang district 100 killed 150 injured mastang blasts)

தென் மேற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் உட்பட 111 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்தில் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் பைசல் காக்கத் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பலுசிஸ்தான் அவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் குவெட்டா என்ற இடத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் மற்றும் சில மாகாண சட்ட சபைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, கடந்த 10 ஆம் திகதி கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சி மூத்த தலைவர் ஹாரூண் பிலோர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல், மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

பலுசிஸ்தான் மாகாணம் மஸ்தாங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொகுதி வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட 33 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மஸ்தாங்கில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 15 பேர் வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விசாரணையில், 8 முதல் 10 கிலோ எடைகொண்ட வெடிபொருள் வெடிக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

(pakistan mastang district 100 killed 150 injured mastang blasts)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites