Type to search

இணைபிரியாத வைத்தியர்கள்; இதற்காகவா மோதல்- இலங்கையில் இப்படியும் இரு வைத்தியர்கள்

NEWS

இணைபிரியாத வைத்தியர்கள்; இதற்காகவா மோதல்- இலங்கையில் இப்படியும் இரு வைத்தியர்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்விகற்று மற்றும் ஒன்றாக மருத்துவ கல்லூரிக்கும் சென்ற வைத்தியர்கள் இருவர், உணவு தொடர்பான குழப்பத்தில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலை உணவகத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். (Close friends two doctors clash)

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரும் பல் எலும்பியல் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருமே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காலி நகரத்தில் இருக்கும் பிரபல பாடசாலை ஒன்றில் இருவரும் ஒரே வகுப்பில் கல்விகற்று, இருவரும் மருத்துவ கல்வியை முடிக்கும் வரை ஒன்றாகவே நெருக்கமான நண்பர்களாகவே இருந்துள்ளனர்.

இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் வைத்தியர் வைத்தியசாலை உணவகத்தில் மதிய உணவை எடுத்துக்கொண்டிருந்தார்.

இதன்போது பல் எலும்பியல் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் இருக்கையில் இருந்து எழுந்துள்ளார்.

இதன்போது, உடம்பில் கொட்டிய உணவை தண்ணீர் குழாய் அருகில் சென்று கழுவிக் கொண்டு உணவகத்தை விட்டு அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியர் வெளியேறியுள்ளார்.

இதன்போது, அவரைப் பின்தொடர்ந்த பல் வைத்தியர் மற்ற வைத்தியரை தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மற்ற வைத்தியரும் இவரின் கழுத்தை பிடித்து தாக்க முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Close friends two doctors clash


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: