மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்

0
1068
released Mawlawi bail Helpful monk

இஸ்லாமிய மதகுருவான மௌலவி ஒருவரை பௌத்த மதகுருவொருவர் பிணை கொடுத்து விடுவித்த சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (released Mawlawi bail Helpful monk)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா கிராமத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்தப் பிரதேசத்தின் மௌலவி ஒருவரான ஏ.ஜே.எம். சஹ்லான் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வேளையில், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வேறு தேவைக்காக சென்ற கல்முனை ஸ்ரீ சுபத்ராராம விஹாராதிபதி ரண்முதுகல சங்கரத்ன ஹிமி தேரர், தடுத்து வைக்கப்பட்ட மௌலவியை விடுவிக்குமாறு பொலிஸ் நிலைய அதிகாரியிடம் கோரியுள்ளார்.

ஒரு பௌத்த நாயக்க ஹிமியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, மௌலவியை பிணையில் விடுவித்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான கஸ்தூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மௌலவி தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் மத்தியஸ்த சபைக்கு மாற்றுமாறு, நாயக்க பிக்குவினால் கோரியதற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மதத் தலைவர்களை இவ்வாறு அகௌரவப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் பிணை பெற்றுக்கொடுத்த ரண்முதுகல சங்கரத்ன ஹிமி தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; released Mawlawi bail Helpful monk