டயகம பகுதியில் மூன்று மாத சிறுத்தை குட்டி மீட்பு

0
548
leopard buddy caught dayagama area upcountry tamilnews

(leopard buddy caught dayagama area upcountry)

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம இலக்கம் ஒன்று பிரிவில் தேயிலை மலையில் இருந்து இன்று (12) மாலை 4.00 மணியளவில் சிறுத்தை குட்டியொன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு வன ஜீவ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேயிலை மலையில் தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த போது மூன்று சிறுத்தை குட்டிகள் அச்சமடைந்து ஓடியதை தோட்டத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஒரு குட்டி மாத்திரம் பொது மக்களால் பிடிக்கப்பட்டு தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுத்தை குட்டி பின்னர் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த தேயிலை மலையை சுற்றி சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அடர்ந்த காடுகள் உள்ளன.

அங்கிருந்து உணவு தேடுவதற்காக தனது தாய் சிறுத்தையுடன் வந்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை குட்டிகள் பிறந்து மூன்று மாதங்கள் பூரத்தியடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அண்மைக் காலமாக மலையகத்தின் பல பகுதிகளில் பல தோட்டங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(leopard buddy caught dayagama area upcountry)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites