தலவாக்கலையில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

0
665
Sumana central college talawakelle Parents protest

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளனர். Sumana central college talawakelle Parents protest

குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியின் முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுலோகங்களில் “எங்கள் பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர் இல்லை. உயர்தர வகுப்பிற்கான ஆசிரியர்கள் இல்லை. உடனடியாக ஆசிரியர்களை நியமியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கியிருந்தன.

இது தொடர்பாக பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பாடசாலையில் பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்கான ஆசிரியர்கள் இல்லை. நீண்ட காலமாக அதிபரும், ஆசிரியர்களும் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கின்ற பொதுவான கல்வி எங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பல தடவைகள் நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பாடசாலைக்கு குறைபாடு நிலவுகின்ற பாடத்திற்கான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Sumana central college talawakelle Parents protest, Sumana central college talawakelle Parents protest