“விராட் கோஹ்லியின் ஆட்டம் இங்கு வேலைக்கு ஆகாது” : சவால் விடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்!

0
1031
Pat Cummins vs Virat Kohli news Tamil

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியால் இம்முறை அவுஸ்திரேலியாவில் செல்லுபடியாகாது என வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். Pat Cummins vs Virat Kohli news Tamil

“இம்முறை விராட் கோஹ்லியால் அவுஸ்திரேலியாவில் ஒரு சதத்தையும் அடிக்க முடியாது. அவரின் துடுப்பாட்டத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியும்” என பெட் கம்மின்ஸ் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கட் வரலாற்றில் இப்போது இருக்கும் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் விராட் கோஹ்லிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. இவரது துடுப்பாட்டம் எதிரணியின் பந்து வீச்சுக்கு சவால் கொடுக்கக் கூடியது.

இந்தநிலையில் விராட் கோஹ்லி தொடர்பில், பெட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள இந்த கருத்தானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் 2014-15 பருவகாலத்தில் அவுஸ்திரேலியா சென்றிருந்த விராட் கோஹ்லி நான்கு சதங்களை விளாசியுள்ளார். அதுமாத்திரமின்றி இவரின் டெஸ்ட் ஓட்ட சராசரி 43.4 ஆக இருக்கும் போது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இவரது சராசரி 62ஆக உள்ளது. இப்படி இருக்கையில் பெட் கம்மின்ஸின் கருத்து செல்லுபடி ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஷல்வூட் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் விராட் கோஹ்லிக்கு அதிகமான சவால்களை கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Pat Cummins vs Virat Kohli news Tamil, Pat Cummins vs Virat Kohli news Tamil, Pat Cummins vs Virat Kohli news Tamil