நவோதய கிருஷ்ணாவை சுட்டுகொலை செய்யும் அதிர்ச்சி CCTV காணொளி வெளியானது

0
1648
Krishna - Colombo Municipal Councilor Shot Dead cctv

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தன் மர்ம நபரால் சுட்டு கொலை செய்யப்படும் அதிர்ச்சி சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.(Krishna – Colombo Municipal Councilor Shot Dead cctv)

கொழும்பு அரசியலில் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதியாக திகழ்ந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பு செட்டித்தெருவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு எதிரில் நேற்று காலை 7.20 மணியளவில் இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

40 வயதான கிருஷ்ணா சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததுடன் கொழும்பு, வடக்கில் தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று வந்தார்.

இவருக்கு இருந்து வரும் மக்கள் ஆதரவு காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேரதலில் சுயேட்சையாக போட்டியிட்டு கொழும்பு மாநகரசபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிருஷ்ணா என்ற இந்த இளம் அரசியல் தலைவரின் அசுர வளர்ச்சியானது ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கு சவலாக இருந்து வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறுகின்றனர்.

மக்களுடன் சர்வசாதாரணமாக நெருங்கி பழகி வரும் கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அரசியல் விரோதம் காரணமாக இருக்கலாம் என அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் கிருஷ்ணாவின் மரணம் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கொழும்பில் 24 மணிநேரத்துக்குள் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார்தெருவில் பழக்கடையொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொாழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய கிருஷ்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இவர் மீது கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன. இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இவரது மரணமானது போாதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.

எவ்வாரெனினும் மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்எமா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பிரிவாலும், புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Krishna – Colombo Municipal Councilor Shot Dead cctv,Krishna – Colombo Municipal Councilor Shot Dead cctv,Krishna – Colombo Municipal Councilor Shot Dead cctv,