சிங்கப்பூருக்கு சென்றுள்ள ரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் : ரத்நாயக்க

0
595
cb ratnayake

சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வரும்போது அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் என கூட்டு எதிர்க் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (cb ratnayake)

சிங்கப்பூர் சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை நாட்டுக்கு மீண்டும் வரும் போது அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் எனவும் அவரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டில் வாழ்வதற்கு குடியுரிமை கூட இல்லாத அர்ஜுன் மகேந்திரன் என்பவரே இவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கபட்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனம் ஒன்றின் மூலமாக தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் டைம்ஸ் நாளிதல், அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டு நாட்டின் அவதானத்தை திசை திருப்ப முயலுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சேறு பூசும் நோக்கிலேயே இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை வெளியிட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:cb ratnayake,cb ratnayake,cb ratnayake,cb ratnayake