Categories: இன்றைய நாள்இன்றைய பலன்சோதிடம்பொதுப் பலன்கள்

இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 25ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி,
9.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி மாலை 5:50 வரை;
அதன் பின் துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 3:32 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : கார்த்திகை விரதம், சர்வ ஏகாதசி, முருகன், பெருமாள் வழிபாடு.

.

மேஷம்:

நண்பரின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பெண்கள் ஆடம்பர நோக்கில் செயல்படுவர்.

 

ரிஷபம்:

பிறரது விமர்சனத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள். முக்கிய செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

மிதுனம்:

மற்றவர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

கடகம்:

எதிர்பார்ப்புடன் சிலர் நெருங்கி வருவர். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். அளவாக இருக்கும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும். சுபவிஷயத்தில் உறவினர் ஒத்துழைப்பர்.

சிம்மம்:

சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. வாகனப் பயணத்தால் நன்மை உண்டாகும்.

கன்னி:

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.

துலாம்:

மற்றவர் விமர்சானம் மனதில் வருத்தம் தரலாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற நன்மையைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வளியூர் பணயத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

விருச்சிகம்:

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். லட்சியம் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

தனுசு:

குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பிராணிகளிடம் இருந்து விலகவும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

மகரம்:

குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். அதிக பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி செய்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

கும்பம்:

நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். தெய்வ அருளால் சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர்

மீனம்:

மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானம் கூடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு..

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: daily horoscopeindraya rasi palanlatest horoscopesothidamtamil astrologytamil horoscopeToday Horoscope 09-07-2018

Recent Posts

டெல்லியில் கொடூரம் நண்பியை கொலை செய்து வீசிய நபர் கைது

தனது நண்பி வேறொருவருடன் பேசி பழகுவதை அறிந்த நபர், அந்த பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது. (Chopped…

21 mins ago

பிக்பாஸ் ஆரவ்வுடைய ஜோடி ஒரு மாடல் அழகியாம்

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று, ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் `ராஜ பீமா' படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். Big Boss Aarav pair model beauty இப்…

31 mins ago

திலீபனின் அகிம்சை தியாகத்தின் எல்லையை மீறிய நாள் இன்று!

இலங்கையில் ஈழப்போர் முளைவிடத்தொடங்கிய காலப்பகுதியில் , அமைதியை நிலை நாட்டுகிறோம் என்னும் போர்வையில் எமது தாயக்கப்பரப்பில் நுழைந்த இந்திய அமைதிப்படையின் முன்னால், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து…

43 mins ago

“விஷாலுக்கு திடீரென நன்றி கூறிய ஸ்ரீ ரெட்டி” எதற்காக நன்றி : கலக்கத்தில் ரசிகர்கள்

தெலுங்கில் அறை நிர்வாண போராட்டம் செய்து பல முன்னணி நட்சத்திரங்களின் அந்தரங்கங்களை வெளியே சொல்லி ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி .தெலுங்கை போலவே தமிழ்…

44 mins ago

மஹிந்தவின் குடும்பத்தை பூண்டோடு அழிக்க சதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை மாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி இடம்பெற்றுள்ளமைக்கான தகவல்கள்…

51 mins ago

பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!

பரிஸில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. France Paris women safety report release…

56 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.