வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது

0
362
Sword attack continue Vavuniya

வவுனியாவில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Sword attack continue Vavuniya)

வவுனியா பூந்தோட்டம், பெரியார்குளம், தோணிக்கல் பகுதிகளைச் சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் காயமடைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டனர்.

தாண்டிக்குளத்தில் நேற்று மாலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள், வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூந்தோட்டம், பெரியார்குளம், தோணிக்கல் பகுதிகளைச் சேர்ந்த 10 இளைஞர்களை சந்தேகத்தில் வவுனியா குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து வாள், கோடாரி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோன்று மாவட்டத்தின் வேறு பகுதிகளிலும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sword attack continue Vavuniya