இந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா..!

0
464
Priyanka chopra Bharat Movie salary 13crore,Priyanka chopra Bharat Movie salary,Priyanka chopra Bharat Movie,Priyanka chopra Bharat,Priyanka chopra

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.(Priyanka chopra Bharat Movie salary 13crore)

அதாவது, இதுவரை ரூ.10 கோடி.., ரூ.11 கோடி என்று வாங்கிய அவர் இப்போது சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்கும் “பாரத்” படத்துக்கு ரூ.13 கோடி கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளம்.

மேலும், முன்னணி நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் கதாநாயகர்கள் கூட, ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர். அவர்களை பிரியங்கா சோப்ரா முந்தியிருக்கிறார்.

தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியான “பத்மாவத்” படத்துக்கு ரூ.12 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுவரை முதல் இடத்தில் இருந்த அவர் இப்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். கங்கனா ரணாவத் ரூ.11 கோடி வாங்குகிறார்.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்று குவாண்டிகோ தொடரில் நடித்த பிறகே அவரது மார்க்கெட் உயர்ந்தது. உலக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளதால் அவர் கேட்ட தொகையை கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இருவரும் மும்பை வந்துள்ளனர். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. “சல்மான்கான்” படத்தில் நடிக்க சில மாதங்கள் மும்பையில் தங்குவது என்றும் பிறகு அமெரிக்கா செல்லவும் பிரியங்கா சோப்ரா திட்டமிட்டுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Priyanka chopra Bharat Movie salary 13crore

Our Other Sites News :-

நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்