பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்

0
366
Grama Niladari bitten hand girl police

ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் சேவையில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை பெண் கிராம சேவகர் ஒருவர் கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (Grama Niladari bitten hand girl police)

இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ரக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பெண் கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை திட்டி மற்றும் எச்சரித்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த கிராம சேவகரை கைது செய்யுமாறு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உத்தரவிடப்பட்டது.

குறித்த பெண் கிராம சேவகர் ரக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு வேறு தேவைக்காக விஜயம் செய்தபோது, குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அவரைக் கைதுசெய்ய முயற்சித்தார்.

இதன்போதே பெண் கான்ஸ்டபிளின் கையை கிராம சேவகர் கடித்துள்ளார். காயமுற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ரக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கிராம சேவகரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்று பெல்மதுள்ளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Grama Niladari bitten hand girl police