வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் அபராதம்

0
703
tamilnews Dh1000 fine wasting food Saudi Arabia proposed

(tamilnews Dh1000 fine wasting food Saudi Arabia proposed)

சவுதி அரேபியாவில் எதிர்வரும் காலங்களில் பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.

அங்கு நாளாந்தம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 40 சதவீதமான உணவு வகைகள் பயன்படுத்தப்படாமல் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் உணவு பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே இனி சவுதி அரேபியாவில் வீணடிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த சட்டமானது உணவு பதப்படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும்.

மேலும் குறித்த சட்டத்தை மீறும் அனைத்து நிறுவனங்களின் உரிமையையும் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் வேளாண்மை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

(tamilnews Dh1000 fine wasting food Saudi Arabia proposed)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :