பசில் ராஜபக்ஷவின் மனைவியின் பெயருக்கு சீன நிறுவனம் வழங்கிய காசோலையின் புகைப்படம்

0
532
china firm release chge former minister basil rajapaksha wife

முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றிற்கு சீனாவை சேர்ந்த துறைமுகநிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. china firm release chge former minister basil rajapaksha wife

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இது குறித்த காசோலையொன்றை வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இது குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் 2012 இல் புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ச மன்றத்தின் பெயரிற்கு அனுப்பபட்டுள்ளது.

கொழும்பு இன்டர்நேசனல் நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் கூட்டு முயற்சியில் தொடர்புபட்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் 85 வீத பங்குகள் ஹொங்ஹொங்கை தளமாக கொண்ட சிஎம் போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பணப்பரிமாற்றம் தொடர்பில் நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாகவும்,கொழும்பு நீதிமன்றமொன்று இது குறித்த ஆவணங்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் அவ்வேளை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் வங்கிகள் உட்பட பலரிடம் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதிக்குற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவினர் பி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன் விசாரணையை அறிக்கையை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஏற்கனவே வழங்கிவிட்டனர் ஆனால் அங்கிருந்து ஆலோசனைகள் எவையும் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
china firm release chge former minister basil rajapaksha wife

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites