Categories: சோதிடம்பொதுப் பலன்கள்

இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 23ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி,
7.7.18 சனிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 8:22 வரை;
அதன்பின் தசமி திதி, அசுவினி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:04 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

.

மேஷம்:

சிறிய முயற்சியும் அதிக நன்மை தரும். விலகிச் சென்ற உறவினரும் அன்புடன் நெருங்குவர். தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு தேவை தாராள செலவில் நிறைவேறும். சுபவிஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 

ரிஷபம்:

நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். பெறறோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மிதுனம்:

வழக்கத்திற்கு மாறான திடீர் பணி குறுக்கிடலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர்.

கடகம்:

முக்கிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

சிம்மம்:

பேச்சு, செயலில் நேர்மையைப் பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் விற்பனை உயர்வால் ஆதாயம் அதிகரிகஅகும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவர்.

கன்னி:

சிலர் உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை மீறி நடப்பர். பொறுமை காப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சிபெற விடாமுயற்சி தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். பயணத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.

துலாம்:

கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை பெற யோகம் உண்டு.

விருச்சிகம்:

ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். வருமானம் உயரும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற அனுகூலம் உண்டு.

தனுசு:

குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்களுக்கு விருந்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

மகரம்:

பெருந்தன்மையுடன் எதிரியையும் மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்:

சொந்தப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற்ற தாமதமாகும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். உடல்நிலை திருப்தியளிக்கும்.

மீனம்:

யாருக்கும் தகுதி மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு கடன் பெற நேரிடலாம். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: daily horoscopeindraya rasi palanlatest horoscopesothidamtamil astrologytamil horoscopeToday Horoscope 07-07-2018

Recent Posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (demonstration demand 7 people…

8 mins ago

திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people…

10 mins ago

முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே…

18 mins ago

ஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது!

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப்…

1 hour ago

பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்

பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused…

1 hour ago

டொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் 20 ஆம் திகதி 168.63 ரூபாவாக அதிகரித்திருந்தமை அறிந்ததே. Sri Lanka Dollar Value 170 Rs Sri…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.