விஜயகலாவுக்கு எதிராக விசாரணைக்குழு அமைத்தது ஐ.தே.க!

0
686
vijayakala maheswaran statement UNP committee

விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஒழுக்க விசாரணையை முன்னெடுப்பதற்கு மூவர் அடங்கிய குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சி இன்று (06) நியமித்துள்ளது. vijayakala maheswaran statement UNP committee

இந்த குழுவில் நெடுஞ்சாலைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்த அதுகோரல மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும், கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவானது விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி ரெஜினா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் மீண்டும் உருவாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நாடுமுழுவதும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து விமர்சனங்களுக்கு முகங்கொடுத்த விஜயகலா மகேஷ்வரன், நேற்றைய தினம் தனது சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக, இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

vijayakala maheswaran statement UNP committee, vijayakala maheswaran statement UNP committee, vijayakala maheswaran statement UNP committee