கிளிநொச்சி வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னம்

0
713
LTTE's symbol Kilinochchi road

கிளிநொச்சியிலுள்ள வீதிகளில் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் சின்னம் வரையப்பட்டுள்ளது. (LTTE’s symbol Kilinochchi road)

கிளிநொச்சி அக்கராயன்குளம் – கந்தபுரம் பகுதிகளிலேயே இந்த சின்னம் வரையப்பட்டுள்ளது.

ஜூலை 5 ஆம் திகதியான நேற்று கரும்புலிகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு கரும்புலிகள் நாள் குறித்து எழுதப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் சின்னமும் வரையப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவம் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; LTTE’s symbol Kilinochchi road