குளத்தை மறைத்து சிவன் ஆலயம் கட்டப்பட்டதால் வாழ்வாதாரம் கேள்விக்குறி – பொதுமக்கள் ஆதங்கம்

0
495
Shiva temple constructed quarter water tank Mudithivu Puthukudiyiruppu

(Shiva temple constructed quarter water tank Mudithivu Puthukudiyiruppu)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள 9 ஏக்கர் குளமொன்றின் கால்வாசிப் பகுதியை மூடி சிவன் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால் குளத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் மக்களின் இருப்பிடம் கேள்விக்குறியாகி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மணற்குளத்தினுள் மண்டபம் உட்பட ஒரு வீடு மற்றும் கள்ளுத்தவறணையும் கட்டப்பட்டுள்ளன.

மந்துவில் கிராமத்துக்கு உரித்தில்லாதவர்கள் அடாத்தாக இந்தக் குளத்தில் ஆலயத்தை கட்டி விஸ்தரித்து வருகின்றனர்.

எனவே, மந்துவில் கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் செல்வாக்கிலேயே இந்த மணற்குளத்திற்குள் ஆலயம் கட்டப்பட்டு மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குளத்தில் இருந்து 24 ஏக்கர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் குளத்தில் நீர் இருப்பதால் 3 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் வரையான குடும்பங்கள் நல்ல குடிதண்ணீர் பெறுகின்றனர்.

குளத்தை மூடி வருவதால் நீர் மட்டம் குறையுமாக இருந்தால் கிணற்று நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீரைப் பெற முடியாது போய்விடும்.

இயற்கைக்கு குந்தகம் விளைவித்தால் இந்தக் கிராம மக்கள் இடம்பெயர வேண்டி வரும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்தப் பிரச்சினை பேசு பொருளாக வந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் குளத்தின் நிலஅளவை வரைபடத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் குளத்தினை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றுமாறு 14.05.2018 புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

பிரதேச செயலர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குளப்பிரச்சினை சம்பந்தமாக போகாத இடமில்லை என்றும் சம்பந்தப்பட்டவர்கள் குளத்தினை மூட முடியாது என்று சொல்லுகின்றார்களே ஒழிய அதற்கான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

(Shiva temple constructed quarter water tank Mudithivu Puthukudiyiruppu)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites