விஜயகலாவிற்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்

0
838
Posters Jaffna support vijayakala maheswaran

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக, யாழப்பாணத்தில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (Posters Jaffna support vijayakala maheswaran)

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் தெற்கில் இருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

அத்தோடு, விஐயகலாவின் கருத்து குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அளிவித்திருந்தார்.

இதனையடுத்தே, அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா என்று குறிப்பிடப்பட்டே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Posters Jaffna support vijayakala maheswaran