27,500 பவுன் தங்கத்தை பதுக்கிய மஹிந்த ஊமை போன்று இருக்கிறார்

0
910
Mahinda Rajapaksa Acquired 27500 pounds gold

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட தங்கத்திற்கு என்ன நடந்தது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார். (Mahinda Rajapaksa Acquired 27500 pounds gold)

இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தீர்கள், யுத்தம் முடிந்ததன் பின்னர், அலரி மாளிகைக்கு கொள்கலனில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் தங்கம் மற்றும் பணத்திற்கு என்ன நடந்ததது? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இராணுவத் தளபதியில் இருந்து தான் ஓய்வு பெற்றதன் பின்னர், விடுதலைப் புலிகளின் தங்கம் அலரிமாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் இருக்கும் போது சுமார் 220 கிலோ தங்கத்தை மீட்டதாகவும் அவற்றை தாம் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப எழுத்துமூல ஆவணங்களுடன் வவுனியா பொலிஸாரிடம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னரான செயற்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சே மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கூற முடியாமல் தற்போது கடந்த மஹிந்த அரசாங்கம் ஊமை போன்றிருப்பதாகவும், அது குறித்து தனக்கும் தற்போது சந்தேகமாகவே இருப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

220 கிலோ கிராம் தங்கம் என்பது 27,500 பவுன் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mahinda Rajapaksa Acquired 27500 pounds gold