ஜெயலலிதா டாக்டரின் வாக்குமூலத்தால் அவரது மரணம் குறித்து சந்தேகம்

0
487
confusion Jayalalithaa statement Apollo Hospital employee
confusion Jayalalithaa statement Apollo Hospital employee

அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் நளினியின் வாக்குமூலத்தால் உண்மைலேயே ஜெயலலிதாவுக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர் நளினி, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

ஜெயானந்த் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கண்ணாடி வழியாக நான் அவரை பார்த்தேன். அப்போது அவர் நர்ஸ் ஒருவரிடம் சைகை மூலம் பேசினார். அவர் சிகிக்சை பெற்று வந்தபோது நான் சசிகலாவுடன் மருத்துவமனையில் பல நாட்கள் இருந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் பல நாட்கள் தெரிவித்தனர்.

அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்து மீண்டு வந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல நான் யோசனை தெரிவிக்கவில்லை என்றார்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அவருக்கு எக்கோ பரிசோதனை செய்த நளினி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

டிசம்பர் 4ம் தேதி மதியம் 3.50 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு எக்கோ பரிசோதனை செய்ய வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். ஜெயலலிதாவின் இதயம் செயல் இழந்த பிறகே என்னை அழைத்தார்கள். நான் அங்கு சென்றபோது மசாஜ் மூலம் அவரின் இதயத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

எக்கோ பரிசோதனை செய்தபோது அவர் இதயம் செயல் இழந்துவிட்டது தெரிய வந்தது என்றார்.

அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் டிசம்பர் மாதம் 4ம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததே என்று ஆணையம் தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். மூத்த மருத்துவர்கள் சொன்னதன் அடிப்படையில் அப்படி எழுதியிருக்கலாம் என்றார் நளினி.

நளினியின் வாக்குமூலத்தால் ஜெயலலிதாவுக்கு மாரடை்பு ஏற்பட்டது எப்பொழுது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ஆணையம் தீர்மானித்துள்ளது.

confusion Jayalalithaa statement Apollo Hospital employee

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :