‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்

0
534
ratnapura court incident

கடவுள் எனது கனவில் வந்து கொடுத்த உத்தரவுகளுக்கு அமையவே நான் பல குற்றச் செயல்களை செய்தேன் என குற்றவாளி ஒருவர் இரத்தினப்புரி நீதவான் நீதிமன்றில் விசித்திர வாக்குமூலம் வழங்கியுள்ளார். (ratnapura court incident)

கிரியல்ல பகுதியில் இடம்பெற்ற வங்கி கொள்ளை ஒன்றில் கைது செய்யப்பட்ட நபரை இரத்தினப்புரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே சந்தேக நபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கிய சந்தேக நபர்,

கடவுள் எனது கனவில் வந்து வங்கியில் கொள்டையிட சொன்னார். அதனால் கொள்ளையடித்தேன். நீதிமன்றை உடைக்க சொன்னார். அதனால் உடைத்தேன். நீதிமன்றில் இருந்து இன்று தப்பிச் செல்ல சொன்னார். அதனால் தப்பிச் செல்ல தீர்மானித்துள்ளேன் என நீதிபதி சாலிய சன்னவிடம் கூறியுள்ளார்.

இந்த நபரின் வாக்குமூலம் பிரகாரம், கடந்த மாதம் 17 ஆம் திகதி இரத்தினப்புரி நீதிமன்றின் வழக்குப் பொருட்களை வைக்கும் அறையை உடைத்தது யார் என்ற உண்மை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர் நேற்று முன்தினமும் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே நீதிமன்றில் இவ்வாறான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

குறித்த நபருக்கு நீதிபதி சாலிய சன்ன, 2 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:ratnapura court incident,ratnapura court incident,ratnapura court incident,