முக்கிய Bike மாடல் உற்பத்தி நிறுத்தம்: பஜாஜ் அதிரடி அறிவிப்பு..!

0
247
bajaj v12 bike temporarily discontinued

(bajaj v12 bike temporarily discontinued)
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் INS விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட V15 மற்றும் V12 மாடல்களில் பஜாஜ் V12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.போதிய வரவேற்பின்மை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பஜாஜ் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

V சீரிஸ் பைக்குகளின் தோற்றத்திலே அமைந்துள்ள V12 பைக்கில் 10.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.. இதன் டார்க் 11 நியூட்டன் மீட்டர் ஆகும். இதன் முன்பக்கத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் கொண்ட சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. இரு டயரில் 130 mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டியூப்லெஸ் டயர்களுக்கு பதிலாக ட்யூப் டயர் பொருத்தப்பட்டுள்ள V12 பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் V15 மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடலின் விற்பனை கடந்த சில மாதங்களாக 1000 எண்ணிக்கைக்கு குறைவாக அமைந்திருப்பதனால் , தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. சில மாறுதல்களுடன் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

bajaj v12 bike temporarily discontinued

Tamil News