விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா

0
1016
vijayakala maheswaran ltte statement marvin silva angry

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரினின் விடுதலைப் புலிகள் கருத்து தொடர்பில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விஜயகலாவை கடுமையாக சாடியுள்ளதோடு சில கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார்.(vijayakala maheswaran ltte statement marvin silva angry)

விஜயகலாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாவின் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அந்த காணொளியில்,

இந்த நாடு சிங்களவர்களின் நாடு. இதை வடக்கு கிழக்கு தெற்கு என பிரிக்க முடியாது. எமது நாட்டு முப்படையினரின் உதவியால் படுகொலையாளியான பிரபாகரனை இல்லாதொழித்தோம்.

ஆனால் இந்த பெண். இவருடைய பெயரை கூட சொல்ல அசிங்கமாக இருக்கின்றது. கணவனை இழந்த இந்த பெண் …. ( கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்கள்) புலி பயங்கரவாதிகள் மீண்டும் வேண்டும் என்கிறார்.

இந்த அரசாங்கம் தொடர்பில் தான் கவலையடைகின்றேன். அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் பேச முடியாவிட்டால் உடனே பதவி விலகி வேண்டும்.

சிங்கள பௌத்த கொள்கை கொண்ட, அனைவரையும் பாதுகாக்கும் சிங்கள பௌத்தரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.

இந்த பெண்ணின் அமைச்சு பதவியை பறித்து சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சி, மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கதைக்கமாட்டார்கள்.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று மீண்டும் பணம் சம்பாதிக்க மஹிந்த, கோத்தபாய ஆகியோரை வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran ltte statement marvin silva angry,vijayakala maheswaran ltte statement marvin silva angry,vijayakala maheswaran ltte statement marvin silva angry